Saturday, 23 May 2015

ஆண்களே! நீங்க ‘அப்பா’வாக‌ வேண்டுமா? இத Try பண்ணுங்க






 

ஆண்களே! நீங்க ‘அப்பா’வாக‌ வேண்டுமா? – கேரட்டை உணவோடு சேர்த்து சாப்பிடுங்க. . .
திருமணம் ஆன ஆண்கள், கேரட்டை உணவோடு சேர்த்து சாப்பிட்டு வந் தால், அவர்களது
விந்தணுவின் அளவு அதிகரிப்பதோடு, அதன் வீரியமும் அதிகரிக்கும். இதனால் அவர்கள் முழு தாதுபலம் பெற்று மனைவியுடன் இணையலாம். அப்ப‍டி இணையும்போது அவர்களின் மனைவி கருத்த‍ரிப் ப‍து நிச்ச‍யம் ஆகவே தான் அப்பா ஆக துடிக்கும் ஆண்கள் தினமும் கேரட்டை உணவில் தவறாமல் சேர்த்து சாப்பிட்டு வருவது நல்லது.

Thursday, 21 May 2015

உணவே விஷமானால் ...சிந்திப்பீர் நண்பர்களே!

உணவே மருந்து’ என்றனர் முன்னோர். ஆனால், மருந்தாக நம்மைக் காக்க வேண்டிய உணவே சில நேரங்களில் ஃபுட் பாய்ஸன் என்ற பெயரால் விஷமாகிவிடுகிறது. உயிர் காக்கும் உணவு இதுபோல விஷமாக ஏன் மாறுகிறது?

‘‘உயிரினங்களைப் போலவே உணவுக்கும் ஆயுள் உண்டு. சமைக்கப்பட்ட உணவு 5 அல்லது 6 மணி நேரத்துக்குப் பிறகு நுண்கிருமிகளின் ஆக்கிரமிப்பால் கெட்டுப் போகத் தொடங்கும். பாக்டீரியாக்களாலும், சில நேரங்களில் வைரஸ்களாலும் ஏற்படும் இந்த நுண்கிருமிகளின் தாக்கம்தான் உணவை விஷமாக்கி விடுகிறது. கெட்டுப்போன உணவுகளை உண்ணும்போது ஏற்படும் ஒவ்வாமையையே Food poison என்கிறோம்’’ என்று அறிமுகம் கொடுப்பவர், ஃபுட் பாய்ஸனின் அறிகுறிகள் மற்றும் தவிர்க்கும் வழிமுறைகளைப் பற்றியும் தொடர்கிறார்...

‘‘வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்படுவதுதான் பெரும்பாலும் இதன் அறிகுறி. உடல் கதகதப்பாக இருப்பது, காய்ச்சல், குமட்டல், பசியின்மை, களைப்பு, அடிவயிற்றில் வலி, மயக்கம், தலைவலி போன்ற அறிகுறிகளும் ஏற்படலாம். ஒரு நாளுக்கு மேல் அறிகுறிகள் தொடர்ந்தால் மருத்துவரிடம் சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும். அதிலும், வாந்தியும் வயிற்றுப்போக்கும் இருப்பின் உடலில் நீர்ச்சத்து இழப்பு அதிக அளவில் ஏற்படும் என்பதால் சிகிச்சை பெற்றாக வேண்டியது கட்டாயம்.

நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்கள், 

ஸ்டீராய்ட் போன்ற மருந்துகள் எடுத்துக் கொள்பவர்கள், வயதானவர்கள், நீரிழிவு, புற்றுநோய் உள்ளவர்களுக்கு ஃபுட் பாய்ஸன் ஏற்படும் வாய்ப்பு அதிகம் என்பதால் கவனமாக இருக்க வேண்டும். சாதாரணமாக, 2 நாட்களில் குணமாகிவிடும் ஃபுட் பாய்ஸன்கூட இவர்களுக்கு குணமாகாமல் பெரிய சிரமத்தை உருவாக்கிவிடலாம். அதனால், இவர்களை உடனடியாக மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளிக்க வேண்டும். 

தேவையான மருந்துகளுடன் திரவ உணவுகளை மட்டும் எடுத்துக் கொண்டு, ஒருநாள் உணவைத் தவிர்த்தாலே பெரும்பாலான ஃபுட் பாய்ஸன் தானாகவே சரியாகிவிடும் . மிதமான ஃபுட் பாய்ஸனாக இருந்தால் 4 நாட்கள் தொடர்ந்து மருந்துகள் சாப்பிட வேண்டியிருக் கும். காய்ச்சலும் இருந்தால் ஆன்டிபயாட்டிக் மருந்துகளும் வயிற்றுப்போக்கு நிற்பதற்கான மருந்துகளும் கொடுக்க வேண்டியிருக்கும். உடலில் சோடியம் அளவு குறைந்திருந்தால் ஐ.வி. என்கிற குளுக்கோஸ் போட வேண்டியிருக்கும்.

கெட்டுப்போன உணவுகளால்தான் ஃபுட் பாய்ஸன் ஏற்படும் என்று இல்லை. சுகாதாரமற்ற தண்ணீரால், சாப்பிட்ட பிறகு போடும் பீடாவால் கூட ஃபுட் பாய்ஸன் ஏற்படலாம். உணவில் கலப்படம் இருந்தாலும் ஃபுட் பாய்ஸன் ஏற்படும். பெரும்பாலும் வெளியிடங்களில் சாப்பிடும் உணவுகளால்தான் இந்தப் பிரச்னை ஏற்படுகிறது என்பதால், வெளியிடங்களில் சாப்பிடும்போது தரமான உணவகங்களில் சாப்பிடுவதே சிறந்தது. குளிர்ந்த உணவுகளில் கிருமிகளின் தாக்கம் ஏற்பட்டிருக்க வாய்ப்பு அதிகம் என்பதால் சாலட் போன்ற குளிர்ந்த உணவுகளைத் தவிர்க்க வேண்டும். சூடான உணவுகளே ஓரளவு பாதுகாப்பானவை. 

வீடுகளில் தேவைக்கேற்ப மட்டுமே சமைக்க வேண்டும். அதிகமாக சமைத்த உணவு கெட்டுப் போய்விட்டால் அதைக் கொட்டுவதற்கு நமக்கு மனம் வராது. ‘வீணாகிறதே’ என்று அந்த உணவையே சாப்பிட்டுவிட்டு, அதன்பிறகு அவதிப்பட வேண்டியிருக்கும். உணவில் பூஞ்சைகள் உருவாவதாலும் ஃபுட் பாய்ஸன் ஏற்படுகிறது என்பதால் குளிர்சாதனப் பெட்டி யில் நாள்கணக்கில் வைத்துக்கொண்டு சாப்பிடுவதும் நல்லதல்ல. 

காய்கறிகள், பழங்கள், கீரைகள் போன்றவற்றை நன்றாகக் கழுவிய பிறகே பயன்படுத்த வேண்டும். சாப்பிடுவதற்கு முன்பு கைகளை நன்றாகக் கழுவ வேண்டும். குழந்தைகள் சுத்தமில்லாத கைகளுடனோ, சுத்தமில்லாத உணவுகளை சாப்பிடுவதாலோ ஃபுட் பாய்ஸனுக்கு அதிகம் ஆளாவார்கள். அதனால் குழந்தைகளிடம் சுகாதாரத்தை வளர்ப்பது அவசியம். வெளியிடங்களில் அரசு அதிகாரிகள் இன்னும் அதிகமான சோதனை களை நடத்தி தரமற்ற உணவுப் பொருட்களைக் கைப்பற்றி, சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று உறுதியான குரலில் முடிக்கிறார் கணேஷ்.  

பிரத்யேக உணவியல் நிபுணர், மருத்துவர் என உடல்நலத்தில் அதிக அக்கறை காட்டும் சச்சின், கமல்ஹாசன் போன்ற பிரபலங்களே ஃபுட் பாய்ஸனுக்கு ஆளானதாக அவ்வப்போது செய்திகளில் படிக்கிறோம். நாம் இன்னும் எந்த அளவுக்கு எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதையே இதிலிருந்து யோசிக்க வேண்டியிருக்கிறது!

ரோஜாவின் மருத்துவ குணம்

பிறந்தகம் அந்நிய பூமியாக இருந்தாலும், நீண்ட காலத்திற்கு முன்பே நம் மண்ணைப் புகுந்த இடமாகக் கொண்டு அங்கிங்கெனாத படி எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் மலர்களின் ராஜாவான ரோஜா மலரின் மருத்துவக் குணம் நாம் அறிந்து கொள்ள வேண்டிய ஒன்றாகும்.
இதனை சம எடையாக சீனக் கற்கண்டுடன் தேன் சேர்த்து அன்றாடச் சூரிய வெயிலில் வைத்து எடுத்துக் கொண்டு காலை,மாலை இரு வேளையும் ஒரு ஸ்பூன் சாப்பிட்டு வரலாம். இதனால் உடலுக்கு உற்சாகத்தையும், மனதுக்கு உல்லாசத்தையும் சிறப்பாகத்தந்து மகிழ்விக்கும்.
குழந்தைகளின் சீதபேதிக்கு இதனிடம் இருக்கும் துவர்ப்புச்சத்து மருந்தாகி குணமாக்குகிறது. அஜீரணமா? வயிற்று வலியா? வேக்காளமா? அனைத்தும் இதனைத் தொகையலாக்கி உண்டாலே பறந்தோடும் என்பதை அனுபவித்துப் பார்த்தவர்களுக்கு நிச்சயம் தெரியும்.
மலம் இறுகிய குழந்தைகட்கு இது சிறிது மலமிளக்கியாகவும் வேலை செய்கிறது.
அன்பிற்குரியோருக்கு தந்தது ஆரத் தழுவ வைக்கும் இந்த ரோஜாவிலிருந்துதான் பன்னீர் தயாரித்து நம்மையும் நம்மைச் சுற்றியுள்ள பகுதிகளையும் மணக்க வைக்கிறது. பூவையர்க்கு ஏற்படும் கருப்பை தொடர்பான வியாதிகளுக்கு நன்கு வேலை செய்து அவர்களைப் புன்னகை பூக்க வைகப்பதில் பெரும் பங்கு வகிக்கிறது ரோஜா.

ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சில டிப்ஸ் (Health Tips)

அறம்,பொருள்,இன்பம்,வீடு என்பதினை அடைய மக்கட்கு மூல காரணமாக இருப்பது ஆரோகியமேயாகும். நோய் தேகத்திலும் மனதிலும் துயரத்தை விளைவிக்கும் நிலை. நோயற்ற நிலையே ஆரோக்கியம். மனிதனிடையே உள்ளவற்றில் மிகவும் சிறந்தது உயிரே ஆகும். உயிருக்கு அடுத்தப்படியாக ஆரோக்கியத்தை கூறலாம். ஆரோக்கியமில்லாத ஒருவனுடைய வாழ்க்கையால் எந்த ஒரு பயனுமில்லை. இந்த ஆரோக்கியம் ஒருநாள் இரவில் வந்துவிடாது. பெரும்பாலோர் உடல் ஆரோக்கியம் குறைய தொடங்கும் போதுதான் ஆரோக்கியத்தை பற்றி சிந்திக்கிறார்கள். அது தவறானது நாம்  ஆரோக்கியமாக உள்ளபோதுதான் உடல் ஆரோக்கியத்தை பற்றி சிந்தித்து தொடர்ந்து பாதுகாக்கும் செயலினை மேற்கொள்ளவேண்டும். அதுதான் நமது வாழ்நாள் முழுவதும் ஆரோக்கியமாக இருக்க வழி வகுக்கும்.
 
இந்த ஆரோக்கியத்தை பெற நம் உண்ணும் உணவே சிறந்த மருந்தாகும். அந்த உணவுகளை அறிந்து உண்ணுவதால் நமது ஆரோக்கியம் நிலைத்திருக்கும் . இவற்றில் நமக்கு அதிகம் பயன் தருவது விலை அதிகமில்லாத சத்தான கீரைகள்தான் மற்றும் பழங்கள் . அவற்றில் உள்ள சத்துக்களின் மகத்துவத்தை பற்றிய சிறிய அலசல் தான் இந்த பதிவு.
 
 
 
கீரைகள் 

 
நமது அன்றாட உணவில் காரஞ்சேர்ந்த உணவுகளை குறைத்துக்கொண்டு பல சத்துக்களை உள்ளடக்கிய கீரை வகை உணவுகளை உண்ணவேண்டும் . ஒவ்வொரு நாளும் உணவில் நிச்சயம் ஏதாவது ஒரு கீரையினை சேர்த்துக்கொள்ளவேண்டும். 
 
"முருங்கைக்கீரை முட்ட வாயு ; ஆத்திக்கீரை அண்ட வாயு"  என்று கூறி சிலர் கீரைகளை உணவாக சேர்த்துக்கொள்ளமாட்டார்கள். என்ன சொல்வது இவர்களின் அறியாமையை. 'வாயு' என்பது நமது வாழ்க்கையில் உள்ளதே தவிர முருங்கைகீரையிலும்,ஆத்திக்கீரையிலும் இல்லை என்பது விஞ்ஞான ஆராய்ச்சியின் அனுபவம்.


நமது நாட்டு அறிய பொக்கிஷமான கீரை -இலைகளில் உள்ள வைட்டமின் கணிசத்தை சற்று ஆராய்ந்து பார்ப்போம்:
 


வைட்டமின் ' ஏ ' மகிமையை தவிர இன்னும் பிற மகிமைகளும் கீரைகளுக்கு உள்ளன. போலிக் ஆசிட் (FOLIC ACID) என்ற வைட்டமின் ' பி 'யின் ஒரு ரகம் கீரைகளில் - இலைகளில் ஏராளமாய் உண்டு. இந்த வகை ரகத்தால் தான் ரத்தம் சோகைப்படாமல் காப்பாற்றப்படுகிறது.



வைட்டமின் 'பி' & 'சி ' பற்றி சுருக்கமாக பார்க்கலாம் . 

முருங்கைகீரையில் அரிசிக்கு மும்மடங்கும். வெந்தயக்கீரையில் அரிசிக்கு இருமடங்கும், பசலைக்கீரையில் அரிசிக்கு மும்மடங்கும் வைட்டமின் 'பி' இருக்கிறது.ஆரஞ்சில் வைட்டமின் ' சி ' 60 யூனிட் என்று அளவுகோல்  வைத்துக்கொண்டால் கீரை- இலைகளில் கணிசத்தைக் காணலாம்.
 
 

கீரைகளில் புரதக் கணிசமும் அதிகமாகவே உள்ளது. அன்றாட உணவில் கீரையினை மசியலாகவோ துகையலாகவோ அல்லது பொரியலாகவோ  சேர்த்துக்கொள்ளவேண்டும். கீரையினை தினசரி உணவில் சேர்த்தக் கொண்டால் மலச்சிக்கல் நீங்கிவிடும்.



பழங்கள்
நமது உடலுக்கு கால்சியம், அயர்ன், பாஸ்பரஸ், பொட்டாசியம், தாதுப்பொருட்கள், வைட்டமின்கள்(Vitamins ) ஆகியவை இன்றியமையாதவை. பழங்களில் இவை அதிகம் இருக்கின்றன.




புரோட்டீன் சத்துள்ள பழங்கள் 

மனிதனின் தசைகளை உருவாக்குகின்ற புரோட்டின் சத்தைப் பேரிச்சம்பழம், அத்திப்பழம், திராட்சைப் பழம், மாதுளம் பழம், வாழைப்பழம்

(நேந்திரம் பழம்), பாதாம் பருப்பு முதலியவற்றிலிருந்து பெறலாம்.



கால்சியம் சத்துள்ள பழங்கள்

எலும்புகளை உருவாக்குகின்ற அல்லது பலப்படுத்தக்கூடிய கால்சியம் சத்தை தக்காளிப்பழம், ஆரஞ்சுப்பழம், கொய்யாப்பழம், திராட்சைப்பழம், பேரிச்சம்பழம் மற்றும் சீரகம் முதலியவற்றிலிருந்து பெறலாம்.



இரும்பு சத்து நிறைந்துள்ள பழங்கள் 


ரத்தத்தை உற்பத்தி செய்கின்ற 'அயர்ன்' என்ற இரும்பு சத்தானது உள்ள பழங்கள் ஆப்பிள், பேரீச்சை, திராட்சை மற்றும் பிஸ்தாப்பருப்பு போன்றவைகள் ரத்தத்திற்கு இரும்பு சத்தினை அளிகின்றன .



பொட்டாசியம் சத்து 

ரத்த சிவப்பு அணுக்களை உருவாக்குகின்ற பொட்டாசியம் சத்து வெள்ளரிக்காயில் 42.6% உள்ளது.இவற்றை உண்டாலே இச்சத்தானது கூடும்.



பாஸ்பரஸ் சத்துள்ளபழங்கள் 

மூளை பலத்தை அதிகரிக்க இந்த பாஸ்பரஸ் நமக்கு அதிகளவில் உதவிபுரிகின்றன. பாதாம்பருப்பு, அக்ரோட்டுக் காயும்  அத்திபழத்துடன் சேர்த்து சாப்பிட்டால் மூளையின் செயல்திறனை இவை அதிகரிக்கின்றன . மூளைக்கு தேவையான அணுக்களையும் தாதுவினையும் பாஸ்பரஸ் சக்தி உற்பத்தி செய்கின்றன.

மூளைக்கு அதிகளவில் வேலைக்கொடுகின்றவர்களுக்கு, பாஸ்பரஸ் சக்தி அவசியம் தேவையாகும். சிந்தனையாளர்கள்,விஞ்ஞானிகள் , ஆராய்ச்சியாளர்கள், மேடை பேச்சாளர்கள் பாஸ்பரஸ் அதிகமுள்ள பழங்களை உண்ணுவதால் மூளையின் செயல்திறன் அதிகரிக்கும்.

பாஸ்பரஸ் சக்தியுள்ள பழங்கள் ஆப்பிள், பேரீச்சம்பழம், அத்திப்பழம் மற்றும் பாதாம் பருப்பு போன்றவைகள் ஆகும். ஆப்பிள் வாங்க முடியாதவர்கள் தான் நம்நாட்டில் அதிகம் அவர்கள் தினசரி இரவு படுக்கும் முன்பு பேரீச்சம்பழத்தை (10 முதல் 20) உண்டு பால் அல்லது சுத்த நீரினை பருகினால் மனபலத்தினை அதிகரிக்க செய்யும்  மற்றும் மூளைக்கு பலத்தை தரும்.


தேன் சிறப்பு 
 



தேன் விலைமதிக்கமுடியாத உணவு பொருள். இது ஒரு அறிய வகை மருந்து. தென்னை உரிமைகொண்டாடாத நாடுகளே இல்லை.சுத்தமான தேன் ஒருபோதும் கெட்டுப்போகாது. இவற்றின் பயன்கள் அனைத்தையும் யாரும் அறிதிருக்கமாட்டார்கள்.

தேனில் 78 பங்கு கரி நீரைகளும் (Carbo  Hydrates) 18 பங்கு தண்ணீரும், 0.2 பங்கு தாதுப்பொருட்களும், 3.8 பங்கு பயன்தரும் பலவித நுண்ணிய வளங்களும் இருக்கின்றன. இதுதான் என குறிப்பிட்டு சொல்லமுடியாத பல நல்ல பொருள்களும்  இதில் அடங்கியுள்ளன. பூவிலுள்ள  மகரந்தம், பிசின், வச்சிரம் (Glue) எளிதில் ஆவியாகக்கூடிய எண்ணைகள் போன்றவைகள் அவற்றில் உள்ளன. மகரந்தம் என்பது ஒரு நேர்த்தியான பொடி. அதில் பிசிதம் நிரம்ப உண்டு. அது சிறுவர்களுக்கும்,குழந்தைகளுக்கும் தலைசிறந்த ஆகாரமாகும்.


தேன் இருதய வளர்ச்சிக்கு மிகமுக்கியமானது ஆகும். இதனை சாப்பிடுவதால் மனம் தேறுவதுடன் இருதயமும் துப்புரவாகி வலிமை அடைகிறது.

மருத்துவ ஆராய்ச்சியின் முடிவில் தேன் மிக சிறந்த நோய் தீர்க்கும்  மருந்து என கண்டறிந்துள்ளனர். காமாலை, சீதபேதி நோய்களையும், மூத்திரப்பை மற்றும் இருதயம் முதலிய முக்கிய உறுப்புகளின் நோய்களை தீர்க்கும் நல்ல மருந்து தேன் என தெரிவிக்கின்றனர். நாம் உண்ணும் உணவினை செரிக்கும் நல்ல மருந்து தேன் .

புலால் உண்ணுவதை விட தேனினை குடித்தால் அதிக உற்சாகமும் ஆற்றலும் உண்டாகிறது.

திருமணமான  தம்பதிகள் இரவில் பால் பருகும் போது ஒரு தேக்கரண்டி தேனினை சாப்பிட்டு வந்தால் சுக்கில கட்டும் ஆற்றலும் மகிழ்ச்சியையும் அதிகப்படுத்துகிறது.

பித்தம் அதிகமாகி அல்லல்படுபவர்கள் இஞ்சியை நன்றாக கழுவி சுத்தம் செய்துக்கொண்டு சிறு துண்டுகளாக வெட்டிக்கொண்டு தேனில் இரண்டு அல்லது முன்று நாட்கள் ஊறவைத்து அதிகாலையில் இரண்டு அல்லது மூன்று துண்டுகள் சாப்பிட்டுவந்தால் எப்படிப்பட்ட பித்தமும் நீங்கிவிடும்.

குழந்தைகளுக்கு தினந்தோறும் அரை தேக்கரண்டி தேனினை  கொடுத்து வந்தால். குழந்தைகளின் தசைகள் உறுதியாகும். ரத்தம் சுத்தமாகி ஆற்றலுடனும், அழகுடனும் விளங்குவார்கள்.

கடும் வயிற்று வலியா கவலை வேண்டாம். ஒரு டம்ளர் கொதிக்கும் வெந்நீரில் ஒரு தேக்கரண்டி தேனினை விட்டு நன்றாக கலக்கி பருகிவிட்டால் பதினைந்து நிமிடங்களில் வயிற்று வலி பறந்துவிடும்.



தேனின் வகைகள் 
  



சுத்தமான தேன் தனிப்பட்ட மனமும் சுவையும் கொண்டது. சுத்த வெள்ளையாகவோ அல்லது கருப்பாகவோ இருப்பது நல்ல தேன் என்று தெரிந்துகொள்ளலாம். தேனின் மனமும், நிறமும் எந்த பூக்களிலிருந்து தேனீக்கள் மது சேர்க்கின்றதோ அப்பூக்களை சார்ந்தே அது இருக்கும். வேப்பம்பூவில் சேகரிக்கப்பட்ட தேன் சற்று கசந்தே இருக்கும். ஹோலி தேன் கருப்பாக இருக்கும் நல்ல வாசனை கமழும். மஞ்சள் நிற தேன் பல வகை காடுகளில் சேமித்து வைக்கப்பட்ட தேனாகும். பளிங்கு போன்று முகம் பார்க்ககூடிய தெளிவுடைய தேனை சற்று நேரம் வைத்திருந்தால் உறைந்து விடும். இதுவும் மிகவும் மேலான தேனாகும். 



மேலே கூறியவை பயனுள்ளதாக இருக்கும் என நம்புகிறேன். பலர் தொகுத்து தந்த அனுபவத்தினை  உங்களுடன் பகிர்ந்துள்ளேன்.  உங்களின் கருத்துகளின் மூலம் எமக்கு நிறை, குறைகளை தெரிவிக்கவும். மீண்டும் அடுத்த நல்ல  பதிவில் சிந்திப்போம்.

ஆரோக்கிய உணவு (Healthy food)

உயிர் வாழ உணவு தேவை என்பது சாதாரண வாக்கியம். வெறும் வாழ்தல் என்பதனைத் தவிர்த்து, ஆரோக்கியமாய் வாழ்தல் வேண்டும் என்றால், நமக்கு நிச்சயம் தேவை "ஆரோக்கிய உணவு".
ஆரோக்கிய உணவு என்றால் பெரும்பான்மையானவர்களுக்கு நினைவுக்கு வருவது, வீட்டில் அம்மா வற்புறுத்திக் கொடுத்து வேண்டாவெறுப்பாய் சாப்பிடும் பெயர் தெரியாத கீரைகள் போன்ற ஒரு சில உணவு பதார்த்தங்கள்தான். கட்டாயப்படுத்தலின் பேரில் உண்ணப்படும் ருசியற்ற உணவுகள்தான் ஆரோக்கிய உணவா? என்றால் நிச்சயம் இல்லை. பின் எவைதான் ஆரோக்கிய உணவு?
நாம் உண்ணும் அனைத்திலும் ஏதேனும் ஒன்று அல்லது பலச் சத்துக்கள் மலிந்துள்ளன. நம் உடல்நிலைக்கு ஏற்ற, நமக்கு தேவையான சத்துக்களைத் தரக்கூடிய உணவுகளை போதுமான அளவிற்கு உண்பதுதான் ஆரோக்கிய உணவு என்பதாகும். நாம் விரும்பி உண்ணும் உணவினையே, அதில் சேர்க்கப்படும் பொருட்களின் அளவினை கூட்டுதல் அல்லது குறைத்தல் மூலம் ஆரோக்கிய உணவாய் மாற்றிக் கொள்ள இயலும். ஆரோக்கிய உணவின் அடிப்படை அம்சங்கள் இந்த மூன்றுதான், Healthy food
1. நம் உடல்நிலைக்கு ஏற்றது
2. தேவையான சத்துக்கள் நிறைந்தது
3. அளவோடு உண்பது
என்னுடைய உடல்நிலைக்கு ஏற்ற உணவு எது என்று யாரேனும் கேள்வி எழுப்பினால் அதற்கு பதில் அளிப்பது மிகவும் சிரமம். ஒவ்வொருவர் உடல்நிலையும் ஒவ்வொரு விதத்தில் இருக்கும். கீரைகள், காய்கறிகள், பழங்கள் போன்றவற்றை பொதுவில் எல்லா தரப்பினருக்கும் பரிந்துரைக்கலாம். ஆனால் குறிப்பாக இவைதான் உங்களுக்கு பொருத்தமான உணவு என்று சொல்லவேண்டும் என்றால் தங்களுடைய உடல்நிலை குறித்த முழுமையான விபரங்கள் தேவைப்படும். ஆகையால் ஒவ்வொருவரும் தங்களது உடல் குறித்த உண்மையான நிலையினை மருத்துவரின் உதவியோடு அறிந்து வைத்து இருத்தல் மிகவும் அவசியம்.
உங்களது எடை மற்றும் உயரத்தினை அவ்வப்போது சோதித்து நினைவில் வைத்துக் கொள்ளவும். இது மிகவும் முக்கியமானது. பிறகு தங்களது எடை தங்களது உயரத்தினைப் பொறுத்து ஆரோக்கியமானதுதானா என்பதனை தெரிந்து கொள்ளவும். இதற்கு உடல் பருமன் சுட்டினை (Body Mass Index) பயன்படுத்துங்கள்.
உங்களது உடல்நிலை ஆரோக்கியமாக சாதாரண நிலையில் உள்ளதா என்பதனை மருத்துவரின் உதவியோடு அறிந்துகொள்ளவும். வெளியில் தெரியாத நோய்கள், பரம்பரை நோய்களின் தாக்கத்திற்கான வாய்ப்பு முதலிய விபரங்களையும் தெரிந்து வைத்திருத்தல் அவசியம். நோய்கள் ஏதேனும் இருப்பின், நோயின் தீவிரம், என்ன வகை, அதனால் தவிர்க்க வேண்டிய உணவுகள் எவை என்பது போன்ற கேள்விகளுக்கும் பதில் அறிந்துகொள்ளவும்.
உங்களது உடல் குறித்த விபரங்கள் தெரிந்து கொண்டபின் உணவு மற்றும் உணவுபொருட்கள் குறித்த சில அடிப்படை விசயங்களைத் தெரிந்து கொள்ளுதல் மிகவும் அவசியம்.
உணவுப்பொருட்களில் அடங்கியுள்ள சத்துக்கள், அவற்றின் பயன்கள் ஆகியவற்றைப் பற்றின தெளிந்த அறிவு, ஆரோக்கிய உணவினைத் தேர்வு செய்ய மிகவும் உதவியாய் இருக்கும்.
ஒருவர் எத்தனை முறை உண்ணவேண்டும், எவ்வளவு உண்ணவேண்டும் என்பது அவரது வயது, பால், எடை, உடல் உழைப்பு இவற்றைப் பொறுத்தது. ஒருவருக்கு நாள் ஒன்றுக்கு எவ்வளவு சக்தி(கலோரி) தேவைப்படுகின்றது என்பதனைப் பொறுத்து அவரது உணவுப்பழக்கத்தினை அமைத்துக் கொள்ளலாம். கலோரிகள் குறித்த பக்கத்தில் இதற்கான விளக்கங்கள் உள்ளன. கலோரி கணிப்பானைக் (Calorie Calculator) கொண்டும் தங்களுக்கு தேவையான கலோரிகளின் உத்தேச அளவினைக் கணக்கிட்டுக் கொள்ளலாம்.
இத்தனை விசயங்களைத் தெரிந்து கொண்டுதான் சமைக்க வேண்டுமா? உண்ணவேண்டுமா? என்ற கேள்வியை எழுப்பினால் அவசியம் இல்லை என்றுதான் பதில் சொல்லவேண்டி வரும். காலம் காலமாக பழக்கத்தில் இருந்து வரும் ஒரே மாதிரியான உணவிற்கு உடலை பழக்கப்படுத்தி கொள்வதின் மூலம் ஆரோக்கியமாக வாழ இயலும். ஆனால் இன்றைய அவசர யுகத்தில் அது பெரும்பான்மையானவர்களுக்கு சாத்தியமாக இருப்பது இல்லை. இந்த நிலையில் நாம் உண்ணும் உணவு குறித்த அறிவு நமக்கு மிகவும் அவசியம் ஆகின்றது. இதனை தெரிந்து கொள்வதினால் நாம் இழக்கப்போவது ஒன்றும் இல்லை. இதனைத் தெரிந்து கொள்ள நாம் வாழ்நாள் முழுவதையும் செலவழிக்கப் போவது இல்லை. ஆகையால் ஆரோக்கிய வாழ்விற்கு இந்த அடிப்படை விசயங்களை அத்யாவசிய அறிவாய் மாற்றிக்கொள்ளுங்கள்.

க‌ண் சோ‌ர்வு‌க்கு மரு‌ந்து

சிலருக்கு தூக்கமின்மையால் கண்கள் சோர்ந்துபோய் காணப்படும். எ‌ன்ன செ‌ய்தாலு‌ம் க‌ண் சோ‌ர்வை போ‌க்க முடியாது. அத‌ற்கு எ‌ளிதான வ‌ழி, ஆரஞ்சு சாறை ‌கு‌ளி‌ர்பதன பெ‌ட்டி‌யி‌ன் ப்ரீஸரில் வைத்து ஐஸ் கட்டியாக்குங்கள். 
 
அதை, சுத்தமான வெள்ளைத் துணியில் கட்டி கண்ணுக்கு மேல் ஒற்றடம் கொடுங்கள். ஒரு நாள்விட்டு ஒரு நாள் இவ்வாறு செய்து வாருங்கள். உங்கள் கண்கள் பளிச், பளிச் என்று மின்னத் தொடங்கிவிடும்.
 
இந்த ஆரஞ்சு ஜுஸ் ஐஸ் கட்டியைக் கொண்டு கண்களுக்கு ஒற்றடம் கொடுத்தால் க‌ண் சோர்வில் இருந்து சட்டென்று விடுபட்டு விடலாம்.

செவ்வாழை ரகசியம்

எல்லோருக்கும் எளிதில் கிடைக்கும் வாழைப்பழம் நிறைய பலன்களை நமக்கு அள்ளித் தருகிறது. தினமும் ஒரு வாழைப்பழம் சாப்பிட்டு வந்தால் அஜீரணக் கோளாறு வராது.
 
மலச்சிக்கல், மூலநோயால் பாதிக்கப்பட்டவர்கள் தினமும் ஒரு வாழைப்பழம் சாப்பிட்டு வந்தால் அந்த நோய்ப் பாதிப்பில் இருந்து படிப்படியாக விடுபடலாம்.
 
வயது ஆக ஆக எல்லோருக்கும் கண்பார்வை குறையத் தொடங்கிவிடும். அத்தகைய பாதிப்புக்கு ஆளானவர்கள், தினமும் ஒரு செவ்வாழைப்பழம் வீதம் 21 நாட்களுக்கு தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் கண் பார்வை படிப்படியாக தெளிவடையும்

இந்தியாவில் முதன் முறையாக சோதனைக் குழாய் மூலம் இரட்டைக் குழந்தை - சென்னை மருத்துவர்கள் சாதனை

இந்தியாவில் முதன் முறையாக சோதனைக் குழாய் மூலம் இரட்டைக் குழந்தையை பிரசவித்து சென்னை மருத்துவர்கள் சாதனை புரிந்துள்ளனர்.
 
இந்தியாவில் முதன்முதலாக சோதனைக்குழாய் முறையில் சென்னையை சேர்ந்த பெண்ணுக்கு நேற்று இரட்டைக்குழந்தை பிறந்துள்ளது. சென்னையில் நடிகர் ஜெமினிகணேசனின் மகளான டாக்டர் கமலா செல்வராஜும், அவருடைய மகள் டாக்டர் பிரியா செல்வராஜும் சேர்ந்து புதிய சாதனை புரிந்துள்ளனர். அதாவது சோதனைக்குழாய் முறை மூலம் கருத்தரிப்பு செய்து குழந்தை பிரசவித்துள்ளனர்.
 
இதுகுறித்து டாக்டர் கமலா செல்வராஜ் கூறுகையில், 'இவ்வாறு உருவாக்கப்படும் கருவை உருவான 40 நாட்களில் ஸ்கேன் எடுத்து பார்த்தால் அந்த குழந்தை நல்ல ஆரோக்கியத்துடன் பிறக்க வாய்ப்பு உள்ளதா என்பதை தெரிந்து கொள்ள முடியும். ஏதேனம் குறைபாடுடன் தான் குழந்தை பிறக்க வாய்ப்பு இருந்தால், குழந்தையை கருவிலேயே அழித்துவிடலாம்' என்று கூறியுள்ளார்.
 
அவ்வாறாக குறைபாடு இல்லாமல் நவீன முறையில் சோதனைக்குழாய் மூலம் தென்னிந்தியாவில் முதன்முதலாக இரட்டைக்குழந்தை தற்போது பிறந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இரண்டு குழந்தைகளில் ஒன்று ஆண் குழந்தை, மற்றொன்று பெண் குழந்தை என்பது சிறப்பம்சமாகும்.

கர்ப்பிணிகளில் பரசிட்டமோல் ஏற்படுத்தும் தாக்கம்

கர்ப்பகாலத்தில் தாய்மார் அதிகமான பரசிட்டமோலை உட்கொண்டால், அது அவர்களது பிறக்கப்போகும் மகனின் இனப்பெருக்க சக்தியை பாதித்துவிடும் என்று பிரிட்டிஷ் விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.
கர்ப்பிணிகளில் பரசிட்டமோல் ஏற்படுத்தும் தாக்கம்
வலி நிவாரணியாக பலராலும் பயன்படுத்தப்படும் பரசிட்டமோல் எலிகளில் ஏற்படுத்தும் தாக்கம் குறித்து ஆராயும் விஞ்ஞானிகளே இதனை தெரிவித்துள்ளனர்.
எலிகளில் மனிதக் கருவின் திசுக்களை செலுத்தி, ஒரு கர்ப்பம் போன்று பாவனை செய்து பரிசோதித்தபோது, பரசிட்டமோல் 7 நாட்களுக்கு கொடுக்கப்பட்டவற்றுக்கு, அதில் டெஸ்ட்துரோனின் அளவு மிகவும் குறைவாக இருந்தமை கண்டுபிடிக்கப்பட்டது.
 
ஆண்களுக்கான இனப்பெருக்க உறுப்புக்களை உருவாக்குவதில் இந்த ஹார்மோன் முக்கிய பங்காற்றுகிறது.
 
கர்ப்பிணிகள் இந்த வலி நிவாரணியை மிகவும் அவசியமாக தேவைப்பட்டால் மாத்திரம், மட்டுப்படுத்தப்பட்ட காலத்துக்கு மாத்திரம் பயன்படுத்த வேண்டும் என்று பிரிட்டனின் சுகாதாரத்துறை கூறுகிறது.

உடல் நலக் குறிப்புகள்


உடல் நலக் குறிப்புகள்
ரத்த அழுத்த்தம் உள்ளவர்கள் மட்டுமல்லாது, உடல் சோர்வு, தலைவலி, தலைச் சுற்றல் ஆகியவை உள்ளவர்கள் ஒரு கிளாஸ் நீரில் ஒரு தேக்கரண்டி ஜீரகத்தைப் போட்டு அதனை கொதிக்க வைத்து பிறகு வடிகட்டி சாப்பிடவேண்டும். இதனை தினம் ஒரு முறை எடுத்துக் கொள்ளலாம்.
 
வாய் துர் நாற்றத்தால் அவதிப்படுபவர்கள் இந்த எளிய வழியை பின்பற்றி அந்தத் தொல்லையிலிருந்து விடுபடலாம். எலுமிச்சை சாற்றில் சுடுநீரைக் கலந்து உப்புப் போட்டு குடித்தால் போதும்.
 
தினசரி உணவுப் பழக்கத்தில் பூண்டு, வெங்காயம், மிளகு, இஞ்சி, பெருங்காயம், ஜீரகம் ஆகியவற்றைச் சேர்த்து வந்தால் ஜீரணப்பிரச்சனை, வாயுத்தொல்லை வராது.

கோடை கால குறிப்புகள்

கோடை காலம் தொடங்கி விட்டதால் சிறுவர்கள் எல்லாம் விடுமுறையை கொண்டாட குதூகலமாய் இருக்க, பெரியவர்களோ கோடை வெயிலின் தாக்கத்திலிருந்து எவ்வாறு தப்பிப்பது என்று திகைத்து கொண்டிருப்பர். இதோ அவர்களுக்கான சில எளிய கோடை கால குறிப்புகள்.
 

 
கோடை காலங்களில் திரவ உணவுகளை அதிகமாக உட்கொள்ள வேண்டும்.
 
மேலும் தண்ணீரை நன்றாக காய்ச்சி, ஆற வைத்து பின்னர் குடிக்க வேண்டும்.
 
தினமும் ஒன்றரை லிட்டர் தண்ணீர் கட்டாயம் பருக வேண்டும்.
 
மேலும் தண்ணீரில் சிறிதளவு உப்பு கலந்து குடித்தால் கோடையில் வெளியேறும் வியர்வைக்கு ஈடாகும்.
 
மோர், இளநீர் ஆகியவற்றை பருகலாம்.

இரவில் அசைவம் வேண்டாம்

இரவு நேரங்களில் அசைவ உணவுகளைத் தவிர்க்க வேண்டும். அசைவ உணவுகள் சுவையாக இருப்பதால் பலராலும் விரும்பி சாப்பிடப்படுகிறது. ஆனால் இரவில் அசைவம் சாப்பிடுவது உடலுக்கு நல்லதல்ல.
 
அசைவ உணவுகள் ஜீரணமாவதற்கு தாமதமாகும். தவிர இரவில் உடல் உழைப்பு ஏதும் இல்லை என்பதால், நிம்மதியான உறக்கத்தை விரும்புவோர் அசைவத்தை இரவில் தவிர்ப்பது நல்லது.
மேலும் உடல் நலத்துக்கும் தீங்கானது. 
 
செரிமானம் ஆகாமல் போகும்பட்சத்தில், வாந்தி, வயிற்று வலி போன்ற தேவையற்ற பக்க விளைவுகள் ஏற்படலாம். ஆஜீரணக் கோளாறில் இருந்து விடுபட அசைவ உணவுக்குப் பின் வாழைப்பழங்கள் சாப்பிடலாம்.
 
எனினும் பொதுவாக இரவு நேரங்களில் சிக்கன், மட்டன், மீன் ஆகியவற்றை தவிர்ப்பதே சிறந்தது.

கர்ப்பிணிகளுக்கு மசக்கை

கருத்தரிப்பு உண்டாகி இரண்டாவது மாதத்தின் துவக்கத்திலேயே மசக்கை உண்டாகும். அதாவது காலையில் பல் துலக்கும்போதோ அல்லது காலை உணவை சாப்பிட்டதுமோ வாந்தி, குமட்டல் ஏற்படும். இரண்டாவது மாதத்தில் ஏற்படும் இந்த குமட்டல், வாந்தி சில வாரங்கள் அல்லது அரிதாக மூன்று மாதங்களுக்கு மேலும் கூட நீடிப்பது உண்டு.
மிகவும் பிடித்த உணவு பிடிக்காமல் போவது, புளிப்பான உணவுப் பொருட்களை விரும்புவது, பிடிக்காத உணவுப் பொருட்களின் மீதான ஆசைகளும் மசக்கையின் அறிகுறிகள். நாம் சாப்பிடும் சாப்பாட்டைப் பார்த்தாலே வாந்தி வருவது போன்ற உணர்வு, சமைக்கும் போது வரும் வாசனையை நுகர்ந்தாலே வாந்தி வருவது, சாதம் கொதிக்கும்போது வரும் வாசனை பிடிக்காமல் போவது‌ம் மச‌க்கைதா‌ன். 
 
பசிக்கும் ஆனால் சாப்பிட உட்கார்ந்தால் வாந்தி எடுப்பதா அல்லது சாப்பிடுவதா என்ற குழப்ப நிலையை உருவாக்கும். உடலுக்கு நல்லதல்ல என்று ஒதுக்கும் பொருட்களின் மீது அதிக விருப்பமும் இந்த சமயங்களில் ஏற்படுவது உண்டு.
 
ஒரு சிலருக்கு இந்த மசக்கை மூன்றாம் மாத துவக்கம் வரையில் மட்டுமே இருக்கும். ஆனால் ஒரு சிலருக்கு 5 மாதம் வரையிலும் கூட இருக்கும். அப்படிப்பட்டவர்கள் வெறும் வயிற்றில் வாந்தி எடுப்பதை தவிர்க்க வேண்டும்.
 
அதாவது காலையில் பல் துலக்கும்போது வாந்தி எடுப்பது, வாந்தி வருகிறது என்று எண்ணி எண்ணி சாப்பிடாமலேயே இருப்பது போன்றவை அல்சரை உண்டாக்கிவிடும். எனவே எப்போதெல்லாம் முடிகிறதோ அப்போதெல்லாம் சிறிது சிறிதாக உணவை எடுத்துக் கொள்ள வேண்டும். திரவ உணவாகவோ, பழம், காய்கறிகள் போன்றவற்றை கொஞ்சம் கொஞ்சமாக உண்ணலாம்.
 
பலருக்கும் இரவு நேரங்களில் அதிகமாக பசிக்கும். அந்த சமயத்தில் சாப்பிடுவதற்கு என சில பொருட்களை எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். சமைத்த உணவுப் பொருட்கள் அல்ல.. பிஸ்கட், பழம், பால் போன்றவற்றை.
 
வாந்தி வரும் என்ற உணர்வை விட... உ‌ங்களு‌க்கு‌ம், உ‌ங்களு‌க்கு‌ள் இரு‌க்கு‌ம் கரு‌வி‌ற்கு‌ம் சே‌ர்‌த்து சாப்பிட வேண்டும் என்ற எ‌ண்ண‌த்தை அதிகமாக நினை‌‌வி‌ல் கொள்ளுங்கள்.

புற்றுநோயைத் தடுக்கும் கேரட்

கேரட்டை தாவரத் தங்கம் என்று கூறுகிறார்கள். தாவரத்தங்கம் என்று பெயர் வந்ததற்குக் காரணம் என்ன என்று பார்ப்போம்.
தங்கத்தை அணிவதால் மேனிக்கு மெருகு கிடைப்பது போல, கேரட்டை அவ்வப்போது உணவில் சேர்த்துக் கொள்வதால், தங்கம் போன்று மேனி பளபளக்கும் என்பதாலேயே அதற்கு தாவரத் தங்கம் என்று பெயர் வந்தது. மேலும் புற்றுநோய் வராமல் தடுப்பதில் கேரட் முக்கியப் பங்காற்றுகிறது. 
 
கேரட்டில் உள்ள கரோட்டின் எனும் சத்தானது, புற்றுநோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கிறது. பீட்டா கரோட்டின் எனும் நோய் எதிர்ப்பு சக்தியை கேரட் அளிப்பதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
தவிர வயிறு தொடர்பான அனைத்து நோய்களையும் குணப்படுத்துகிற ஆற்றலும் கேரட்டிற்கு உண்டு. 
 
உதாரணமாக குடல்புண் (அல்சர்) நோய் உள்ளவர்கள், காரம் சாப்பிட்டால் வயிற்று வலி வருபவர்கள் கேரட் சாறினை வாரத்தில் மூன்று தடவை வீதம் இரண்டு மாதம் சாப்பிட்டு வர அவை குணமாகும். மேலும் கேரட்டில் நார்ச் சத்து அதிகம் உள்ளதால் மிகுந்த நன்மை தருவதுடன் செரிமானத்தை தூண்டி நல்ல ஜீரண சக்திதியையும் அளிக்கிறது.

தலைவலிக்கு நிவாரணம் தரும் வெந்நீர்


திடீரென்று கடுமையான தலை வலியா? தலைவலியை உணர்ந்தவுடன் 200 மி.லி அளவு வெந்நீர் அருந்துங்கள். சில நேரங்களில் அஜீரணம் அல்லது குடலில் போதிய அளவு தண்ணீர் இல்லாததால் கூட தலை வலி ஏற்பட வாய்ப்புண்டு.

எனவே இளஞ்சூட்டில் வெந்நீர் குடித்தால், உடனடியாக ஜீரணத்தை தூண்டி தலைவலி நீங்கும். அல்லது சூடான காபியை குடியுங்கள். தலைவலிக்கு இதமான மருந்தாக காபி அமையும்.

தே‌ங்கா‌ய் எ‌ண்ணெ‌ய் மரு‌‌த்துவ‌ம்



குழ‌ந்தைகளு‌க்கு ச‌ளி ‌பிடி‌த்‌திரு‌ந்தா‌ல் தைல‌ம் தே‌ய்‌‌ப்பா‌ர்க‌ள்.

 ஆனா‌ல், அதை ‌விட ‌சிற‌ந்த மரு‌ந்து தே‌‌ங்கா‌ய் எ‌ண்ணெ‌ய் க‌ற்பூர‌ம் தா‌ன்.

 தேங்காய் எண்ணையை ந‌ன்கு சூடா‌க்‌கி இற‌க்‌கி அ‌தி‌ல் கற்பூரம் சேர்த்து அதனை குழ‌ந்தை‌யி‌ன் உட‌ல் சூடு தா‌ங்கு‌ம் அள‌வி‌ற்கு ஆர வைத்து நெஞ்சில் தடவ சளி குணமாகும்.

முட்டை சாப்பிட்டால் நீரிழிவு நோய் வருவதை தடுக்கும்: ஆய்வில் தகவல்

மனிதர்களை தாக்கும் முக்கிய நோய்களில் நீரிழிவும் ஒன்று. இந்த நோய் தற்போது சாதாரணமாகி விட்டது. அதில் டைப் 2 நீரிழிவு நோய் ஒருவரது வாழ்க்கை முறை பழக்க வழக்கங்களான உடற்பயிற்சி, சத்துணவு போன்றவைகளால் ஏற்படுவதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது. 

அதே நேரத்தில் அதிக அளவு கொழுப்பு சத்துகளால் உடலில் குளுக்கோஸ் குறைபாடு ஏற்பட்டு அதன்மூலம் இந்நோய் ஏற்படுவதாகவும் பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் தற்போது முட்டை சாப்பிட்டால் டைப் 2 நீரிழிவு நோய் தாக்கம் குறையும் என புதிய ஆய்வு தெரிவிக்கிறது. 

முட்டையில் உள்ள கொழுப்பு சத்து உடலில் சுரக்கும் குளுக்கோஸ் அளவை சரிசமப்படுத்தி சீரமைத்து நீரிழிவு நோய் வராமல் தடுக்கிறது. கிழக்கு பின்லாந்து பல்கலைக்கழகத்தின் இருதய நோய் தடுப்பு பிரிவை சேர்ந்த நிபுணர்கள் 432 பேரிடம் ஆய்வு நடத்தினார்கள். அதில் வாரத்துக்கு ஒரு முட்டை சாப்பிடுபவர்களை விட வாரத்துக்கு 4 முட்டை சாப்பிடுபவர்களுக்கு டைப் 2 நீரிழிவு நோய் தாக்குதல் குறைவாக இருந்தது. அதன்மூலம் முட்டை சாப்பிட்டால் நீரிழிவு நோய் தாக்கம் குறையும் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

Sunday, 17 May 2015

தொப்பை குறைய அன்னாசி சாப்பிடுங்க


 

 
பச்சைக்காய்கறிகள் மற்றும் பழங்களை உண்பதால் உடலின் சக்தி அதிகரிக்கிறது. நோய் எதிர்ப்பு தன்மை அதிகரிப்பதால் உடல் ஆரோக்கியம் பெறுகிறது. பழங்களிலேயே அன்னாசிப்பழம் ஊட்டச்சத்து அதிகம் நிறைந்த பழமாகும்.
இனிமையும், மணமும் நிறைந்த இந்த பழத்தில் நீர்ச்சத்து 85 சதவிகிதம் உள்ளது. சர்க்கரைப் பொருட்கள் 13 சதவிகிதமும் புரதச்சத்து 0.60 தாது உப்புகள் 0.05 நார்ச்சத்து 0.30 சதவிகித அளவிலும் உள்ளன. சுண்ணாம்புச் சத்து. மணிச்சத்து. இரும்புச் சத்து போன்ற சத்துக்களும் அடங்கியுள்ளன. மேலும் வைட்டமின் ஏ, பி, சி போன்றவைகளும் அடங்கியுள்ளன..
 
 மருத்துவகுணம்
 அன்னாசிபழத்திற்கு மஞ்சள் காமாலை, சீதபேதி, இவற்றைக் குணப்படுத்தும் தன்மை உள்ளது. இது சிறுநீரகக் கற்களை கரைக்கும். உடல்வலி, இடுப்புவலி ஆகியவற்றை குறைக்கும். பித்தத்தை நீக்கும். உடலுக்கு அழகைத்தரும். உள் உறுப்புகளை பலப்படுத்தும். 
 
குழந்தைகளுக்கு மருந்து
 
 அன்னாசி இலைச்சாறு வயிற்றுப்புழுக்கொல்லியாக செயல்படுகிறது. அன்னாசி இலைச்சாறு ஒரு ஸ்பூனுடன் தேன் கலந்து அருந்த, பேதியாகி வயிற்றுப்பூச்சிகள் வெளியேறிவிடும். இலையைப்பிழிந்து சாறு எடுத்து ஒரு ஸ்பூன் சாறுடன், சிறிதளவு சர்க்கரை கலந்து சாப்பிட, விக்கல், இழுப்பு நோய் தீரும். அன்னாசிப்பழச்சாறுடன் தேன் கலந்து குழந்தைகளுக்கு கொடுத்தால் உள் உறுப்புகள் பலப்படும். கண் ஒளி பெறும். குழந்தைகளுக்கு அடிக்கடி இப்பழச்சாறு கொடுத்து வர பசி ஏற்படும். எலும்பு வளர்ச்சி, உடல் வளர்ச்சி ஏற்படும். 
 
இதயக்கோளாறு நீங்கும்
 
 அன்னாசிப்பழத் துண்டுகளை தேனில் கலந்து சாப்பிட்டு வர உடல்பலம் கூடும். உடல் பளபளப்பாகும். அன்னாசிப்பழம் அடிக்கடி சாப்பிட்டு வர, சிறுநீரகக்கற்கள் கரையும். இதயக் கோளாறு, பலவீனம் குணமாகும். பழ ச்சாறை ஒரு நாள் நான்கு வேளை ஒரு அவுன்ஸ் வீதம் சாப்பிட்டு வந்தால் இடுப்பு வலி மாறும். பழச்சாறை தொண்டையில் படும்படி சிறிது நேரம் வைத்திருந்து விழுங்கி வர தொண்டைவலி, தொண்டைப்புண் தீரும். ஜீரணசக்தி அதிகரிக்கும் அன்னாசிப்பழச்சாறு மஞ்சள் காமாலைக்கு சிறந்ததாகும். 
 
வயிறு நிறைய உணவு உண்ட பின் ஒரு துண்டு அன்னாசிப்பழத்தை உண்ண எளிதில் ஜீரணம் ஆகும். பழச்சாறில் குடல் செயலை ஊக்குவிக்கும் அமிலம் உள்ளதால் எளிதில் ஜீரண சக்தி அதிகரிக்கும். ஒரு நாளைக்கு தேவையான மாங்கனீஸ் உப்பைப் பெற ஒரு கப் பழத் துண்டுகளைச் சாப்பிட்டு வந்தால் போதும். பொட்டாசியம்,கால்சியம் போல உடல் நலத்திற்குத் தேவையான உப்பு கிடைக்கிறது. இந்த பழத்தில் உள்ள குளுகோஸ் வளர்சிதை மாற்றத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. 
 
 பித்தக் கோளாறுகளை அன்னாசி பழம் விரைந்து குணமாக்குகிறது.அன்னாசியில் கொழுப்புச்சத்து குறைவு, நார்ச்சத்து அதிகம்,அன்னாசியில் புரதம் தாராளமாக இருப்பதால் ஜீரணக் கோளாறு உடலில் வீக்கம் போன்றவை ஏற்படாது. 
 
 தொப்பை கரையும் இளம்பெண்கள் உட்பட அனைவரின் தொப்பையும் கரைக்கும் சக்தி அன்னாசிக்கு உண்டு. ஓர் அன்னாசிப்பழத்தைச் சிறு துண்டுகளாக நறுக்கி நான்கு தேக்கரண்டி ஓமத்தை பொடி செய்து அதில் போட்டு நன்றாகக் கிளறி ஒருடம்பர் தண்ணிர் ஊற்றிக் கொதிக்கவிடவும் இரவில் அதை அப்படியே வைத்திருந்து மறு நாள் காலையில் அதைப் பிழிந்து சாறு எடுத்து வெறும் வயிற்றில் சாப்பிடவேண்டும். பத்து நாட்கள் இதேபோல் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் தொப்பை கரைய ஆரம்பிக்கும் அன்னாசிக்காய்க்கு கர்ப்பப்பையை சுருக்கும் தன்மை உண்டு. எனவே கர்ப்பிணிகள் இப் பழத்தைத் தவிர்க்க வேண்டும்.